ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரத்தில் ஏற்கனவே ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். தற்பொழுது இரண்டாவதாக ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டிருக்கிறது அதில் சில விளக்கங்களும் அவர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான சமீபத்தில் ஜெயம் ரவி ஆர்த்தி ஆகியோர் இந்த காதல் தம்பதி விவகாரத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பல விவாதத்துக்கு ஏற்படுத்தி இருந்தது. இதற்கு இடையில் பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி அவர்கள் வாழு வாழவிடு என்ற கருத்தை முன்வைத்து இது எங்களுடைய பர்சனல் விஷயம் இதில் யாரும் தலையிட வேண்டாம் இதை யாரும் பெரிதாக பேசப்பட வேண்டாம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது ஜெயம் ரவி அந்த அவர்கள் குடியிருந்த வீட்டு வேலைக்காரர்களை விட மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக இந்த தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இது அவரது இரண்டாவது அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையில் எனது தனிப்பட்ட பொது வாழ்க்கையில் என்னைச் சுற்றி உலாவரும் கருத்துக்களின் வெளிச்சத்தில் எனது மௌனம் பலவீனமாகவும் குற்ற உணர்வின் அடையாளமாகவும் கருதப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார், மேலும் நான் கண்ணியமாக இருக்க விரும்புகிறேன் உண்மையை மறைப்பதாக உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயல்பவர்களுக்கு பதிலளிக்க இருக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக எடுத்த வழிதான் இந்த மௌனம் என தெரிவித்திருக்கிறார். தெளிவாக சொல்லப்போனால் முந்தைய அறிக்கையில் நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் பரஸ்பர ஒப்புதலின் மூலம் வெளியிடப்படவில்லை என்றும் ஒருதலைபட்சமாக அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தான் கூறியிருந்தேன் நான் கூறிய கருத்துக்கள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதாகவும் இன்றுவரை எந்த பிரச்சனையிலும் எங்களுக்குள் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்க இருக்கிறேன் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார் இதன் மூலமாக ஜெயம் ரவி உடனான தனிப்பட்ட விவாதத்தை நான் இன்னும் எதிர்பார்க்கிறேன் என்பதை அவர் தெரிவித்திருக்கிறார் நான் திருமணத்தின் முக்கியத்துவத்தையும் புனிதத்தையும் மதிக்கிறேன் யாருடைய நட்பையும் புண்படுத்துவதற்காக விவாதங்களில் நான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் எங்களது குடும்ப நலனை தான் நான் கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுகிறேன் என அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
