உலகளவில் 6 நாட்களில் ‘காந்தாரா: சாப்டர் 1’ செய்த வசூல்

காந்தாரா சாப்டர் 1 – 6 நாட்களில் ரூ. 415 கோடி வசூல்! உலகளவில் வெற்றிநடைபோடும் ரிஷப் ஷெட்டி

கன்னட திரையுலகிற்கு புதிய அடையாளமாக மாறிய காந்தாரா திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியானபோது ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வெற்றியை தொடர்ந்து காந்தாரா: சாப்டர் 1 திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மிணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முந்தைய பாகத்தை விட மிகப்பெரிய அளவில், பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்புடன் உருவான இந்த படம், வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வெறும் 6 நாட்களில், காந்தாரா: சாப்டர் 1 உலகளவில் ரூ. 415 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் திரைப்பயணம் இன்னும் வலுவாகத் தொடரும் நிலையில், ஓரிரு நாட்களில் இது ரூ. 500 கோடி மைல்கல்லை தாண்டும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, ரிஷப் ஷெட்டி தனது கன்னட சினிமாவை மீண்டும் ஒரு முறை சர்வதேச அளவில் உயர்த்தியுள்ளார்.