சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

தம்புள்ளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த விடுமுறை நாட்களில் ஆய்வகம் குரங்குகளால் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன. இதன்போது, இரும்பைக் கண்டறியப் பயன்படும் இரசாயனப் பொருளை மிளகாய் தூள் என நினைத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் உட்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து முறைப்பாடு பெறப்பட்டதை அடுத்து, தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். குறித்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்