இன்றைய பாராளுமன்ற அமர்வு

 

ஒக்டோபர் மாதத்துக்கான முதல் பாராளுமன்ற வாரம் இன்று (07) முதல் ஆரம்பமாகிறது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளது.

முற்பகல் 10.00 – மு.ப. 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மு.ப. 11.00 – மு.ப. 11.30 வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் மு.ப. 11.30 – பி.ப. 5.00 மணி வரை விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற அமர்வின் இறுதியாக பி.ப. 5.00 – பி.ப. 5.30 மணிவரையில் சபை ஒத்திவைப்பு வேளையின்போதான வினாக்களுக்கான நேரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.