இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்

இலங்கையில் 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்ளுதல், ஊசிகள் பயன்பாடு, கர்ப்பிணிக்கு எயிட்ஸ் இருக்குமாயின் பிறக்கும் குழந்தைக்கும் எயிட்ஸ் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு 411 நோயாளர்களும் 2022ஆம் ஆண்டு 607 நோயாளர்களும் 2023 ஆம் ஆண்டு 697 நோயாளர்களும் 2024 ஆம் ஆண்டு 824 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களுள் பெரும்பாலானோர் ஆண்கள்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை 6740 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

எயிட்ஸ் தொடர்பான சிகிச்சைகளைப் பெறுவதற்கு தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொலைபேசி (+94703733933) எனும் எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது