நுகேகொடை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் ஆசிரியர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி முற்பகல் மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பதிவானது.
சம்பவ தினத்தன்று ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.
சிறுவன் களுபோவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று (09) இடம்பெற்றதுடன் களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சடலம் தொடர்பிலான திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முன்பள்ளி உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர், மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட ஏழு பேர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
