பன்னிப்பிட்டிய பகுதியில் வர்த்தக நிலையத்தில் தீ

பன்னிப்பிட்டிய, தெபானம பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீயினை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ப்ளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடையிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.