2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் எச். டெவோரெட் (Michel H. Devoret) மற்றும் ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூன்று பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக குறிப்பாக, மாபெரும் குவாண்டம் இயந்திரக் கடத்தல் (macroscopic quantum mechanical tunnelling) மற்றும் மின்சுற்றில் ஆற்றல் அளவமைப்பு (energy quantisation) இப்பரிசு மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
