புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதனடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களாக
பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு
அனுர கருணாதிலக்க – துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து
சுசில் ரணசிங்க – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பொறுப்பாகவும் பிரதி அமைச்சர்களாக,
ஆச்சார்ய அனில் ஜயசிங்க – திட்டமிடல் பிரதி அமைச்சர்
டி.பி சமன் – வீடமைப்பு, நீர்வழங்கள் பிரதி அமைச்சர்
எம்.எம்.மொஹமட் மூனீர் – மதவிவகார காலாசடசார பிரதி அமைச்சர்
டாக்டர் மூதித ஹங்சகவிஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்
அரசிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர்.
எச்.எம்.தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்.
யு.டி.திசாந்த ஜயவீர – பொருளாதார பிரதி அமைச்சர்
ஆச்சார்ய கௌசல்ய ஆரியரத்ன – ஊடக பிரதி அமைச்சர்
எம்.ஐ.எம். அர்கம் – மின்சக்தி பிரதி அமைச்சர்
